25.7 C
Jaffna
January 18, 2025
Pagetamil
குற்றம்

கஞ்சாவையும், கைத்தொலைபேசியையும் போட்டுவிட்டு தப்பியோட்டம்!

பொன்னாலை ஊடாக காரைநகருக்கு கஞ்சா கொண்டு சென்றவரை மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றபோது குறித்த நபர் கஞ்சாவையும் கைத்தொலைபேசியையும் கைவிட்டுத் தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் இன்று (04) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த நபர் கஞ்சா கொண்டு செல்கின்றார் என பொன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவரை வழிமறித்த இளைஞர் விசாரணை நடத்தினார். இதன்போது அவரிடம் கஞ்சா இருந்தமை கண்டறியப்பட்டது.

அவரை வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக கொண்டுசென்றபோது திடீரென்று அவர் காரைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

இது தொடர்பாக வட்டார உறுப்பினர் ந.பொன்ராசாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரிடம் கஞ்சாவும் கைத்தொலைபேசியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியை வைத்து குறித்த நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொன்னாலை கரையோர வீதியூடாக கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளமையால் சந்தேக நபர்களை மடக்கிப் பிடிப்பதற்கு எமது பிரதேச இளைஞர்கள் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment