தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில், லங்கா இந்தியன் ஓயில் நிறுவனத்தின் எரிபொருள் பவுசர் நடத்துனர்களும் சனிக்கிழமை முதல் இணைந்துகொள்ளவுள்ளனர்.
எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எரிபொருள் பவுசர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரியே தற்போது பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைத்தன்மையற்றவை என இலங்கை தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் செயலாளர் டி.வி.சாந்த சில்வா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், புகையிரதத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் முன்வைத்த கூற்றுக்கள் முன்னைய அமைச்சர்களாலும் முன்வைக்கப்பட்டன. புகையிரதங்கள் முதன்மையாக பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுவதால், புகையிரதங்கள் மூலம் எரிபொருளை விநியோகிப்பது நடைமுறைக்கு மாறானது என்று அவர் கூறினார்.