உங்களை புரிந்து கொள்கின்றோம்; எங்களைப் புரிந்து கொள்ளுங்கள்: ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு

Date:

தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை கடந்த காலங்களில் பேரவலத்தை சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்கின்றோம். உணர்ந்து கொள்கின்றோம். மதிக்கின்றோம்.

இத்தருணத்தில் சிங்கள மக்கள தமிழ் மக்களாகிய எங்களது வலிகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம் என ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கைத்தீவு மிக அண்மைய நாட்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றது. தென்னிலங்கை சிங்கள மக்கள் இந்த நெருக்கடிக்கு எதிராக மாபெரும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்

தென்னிலங்கை மக்களின் இந்த எழுச்சியின் நியாயத்தை கடந்த காலங்களில் பேரவலத்தை சந்தித்த இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாங்கள் புரிந்து கொள்கின்றோம். உணர்ந்து கொள்கின்றோம். மதிக்கின்றோம்.

இந்த நெருக்கடிக்கு அடிப்படைக் காரணமான தமிழ் மக்கள் மீது காலங்காலமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய அடக்கு முறைகள் இதுவரை பாராமுகமாகவே தொடர்ந்து வருவது வேதனைக்குரியது.

இத்தருணத்தில் சிங்கள மக்கள தமிழ் மக்களாகிய எங்களது வலிகளையும் நியாயங்களையும் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி நிற்கின்றோம்.

உங்களை புரிந்து கொள்கின்றோம். எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக இருக்கின்றது என்பதை ஒருங்கிணைத்த தமிழர் கட்டமைப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்