உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இன்று சந்தைக்கு மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ தலைவர் விஜித ஹேரத், எரிவாயு இருப்புக்களை ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாகவும், மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எரிவாயு விநியோக பொறிமுறையானது வழமைக்கு திரும்புவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும் என விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்றைய தினம் 12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 2,185 ரூபாவினால் அதிகரித்து, 4,860 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் முன்பு ரூ.2,675க்கு விற்கப்பட்டது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதேவேளை, 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.874 அதிகரித்து ரூ.1,945 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.404 அதிகரித்து ரூ.910 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.