3600 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் எரிவாயுவை இறக்கிய பின்னர் நாளை (27) விநியோகத்தை ஆரம்பிக்கும் எனவும் 3,600 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட மற்றுமொரு கப்பல் நாளை மறுநாள் (28) இலங்கைக்கு வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு கப்பல்களுக்கும் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது, லிட்ரோ மேலும் கூறியது.




