சதொசாவில் வரிசையில் நின்ற மக்களிற்கு இலவசமாக அரிசி வாங்கிக் கொடுத்த சுற்றுலா பயணி!

Date:

இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலா பயணியொருவர், அரிசி வாங்க வரிசையில் நின்ற மக்களிற்கு தனது செலவில் அரிசி வாங்கிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நாடு முழுவதும் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு, விலையேற்றம் என மக்கள் வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தப்பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வரிசை நிற்கிறது.

அப்படித்தான், வெலிகமவிலுள்ள சதொச விற்பனை நிலையத்தில் அரிசி வாங்க மக்கள் வரிசையில் நின்றுள்ளனர்.

210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் அரிசி, சதொச நிறுவனத்தில் 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலையடுத்து, ஏராளமாக மக்கள் சதொசவின் முன்பாக கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்றுள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணியான கிரே ரோசம்பிரக் என்பவர் அந்த வழியால் காரில் சென்று கொண்டிருந்த போது, வரிசையை கவனித்து, அது பற்றி விசாரித்துள்ளார்.

அரிசி வாங்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதை தெரிந்ததும், அங்கு வரிசையில் நின்ற 129 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை கையளித்ததுடன் மருந்து வாங்க வந்தவர்களுக்கு தலா 2000 ரூபாயும் வழங்கினார். சுற்றுலா பயணியின் நண்பரான பிக்கு ஒருவரும் இதன்போது உடனிருந்தார்.

கிரே ரோசம்பிரக் பௌத்த மதத்தைப் படிப்பதற்காக பல வருடங்களாக இலங்கைக்கு அவ்வப்போது சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்