Pagetamil
இலங்கை

இடைக்கால அரசை வலியுறுத்தி 13 ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு  ஆளும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பான மகஜரை கையளித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் இருந்து பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரியவருகிறது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்களும் மனசாட்சிக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

ஆய்வு கூட பரிசோதனையில் வெடிப்பு: 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்குதல் தொடர்பில் மீண்டும் விசாரணை

east tamil

யோஷித ராஜபக்ச கைது

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment