ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்பன எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.




