25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இந்தியா

8ஆம் வகுப்பு காதல் எக்குத்தப்பாய் முடிந்தது: மாணவி கழுத்தறுத்துக் கொலை!

8 ஆம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்ட காதலை நம்பி ஓடிச்சென்று, அதிகாரிகளால் மீட்கப்பட்டு 12 ஆம் வகுப்பு வரை பெற்றோர் படிக்க வைத்த நிலையில், திருமண வயது ஆனதும் காதலனுடன் சென்ற பெண் காதல் கணவனாலேயே கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், புதுக்கடை வீதியை சேர்ந்தவர் சிகோரேயான். இதே பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரினா. இவர் 8 ஆம் வகுப்பு பயின்று வரும்போதே காதலில் விழுந்த நிலையில், காதல் ஜோடி வெளியூருக்கு ஓட்டம் பிடித்துள்ளது. அன்று ஜெப்ரினா சிறுமியாக இருந்ததை காண்பித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, மீண்டும் பெற்றோரால் படிக்க அனுப்பி வைக்கப்பட்ட ஜெப்ரினா, 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். இவர்களின் காதலும் பெற்றோருக்கு தெரியாமல் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதியுடன் திருமண வயதை பூர்த்தி செய்த நிலையில், ஜூன் மாதம் 10 ஆம் தேதி காதல் ஜோடி மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றுள்ளது.

அங்கு பத்திரப்பதிவுத்துறையில் இருவரும் திருமணம் செய்ய முயற்சித்தபோது, அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்த ஜோடி, வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளது. மேலும், உணவுக்கே கஷ்டப்படும் சூழலுக்கும் தம்பதி தள்ளப்பட்டுள்ளது.

சிகோரேயான் தாயார் ஹெலன் திண்டுக்கல்லில் வசித்து வந்த நிலையில், இருவரும் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் மூவரும் ஒன்றாக தங்கியிருந்த நிலையில், தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, ஜெப்ரினாவிற்கு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பியூட்டர் சென்டரில் வேலை கிடைத்துள்ளது.

அங்கு சென்ற ஜெப்ரினா பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, வேலைபார்த்துக்கொண்டே படிக்கவும் தொடங்கியுள்ளார். காதல் மனைவியை பிரிந்து தவித்த சிகோரேயான், இன்ஸ்டாகிராம் மூலமாக அவர் எங்கு இருக்கிறார் என கண்டறிந்து கோவைக்கு சென்றுள்ளார். அங்கு ஜெப்ரினாவிடம் சமாதானம் பேசிய நிலையில், திண்டுக்கல்லுக்கு செல்ல பேசி முடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து புறப்பட்ட தம்பதி ஹெலனின் இல்லத்திற்கு சென்ற நிலையில், அங்கு ஹெலன் சமாதானம் பேசி முடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிகோரேயான் மனைவியிடம் சென்னைக்கே மீண்டும் சென்றுவிடலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெப்ரினா, கோவையில் படித்துக்கொண்டு வேலை பார்ப்பதால், அது முடிந்ததும் சென்னை போகலாம். இப்போது வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தம்பதியிடையே வாக்குவாதம், கைகலப்பு போன்ற பிரச்சனை நடந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சிகோரேயான் காதல் மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். பின்னர், நிலைமையை உணர்ந்து தானும் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு நகர காவல் துறையினர், ஜெபினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment