பலியிடப்பட்ட 2 கோழிகள் மீட்பு: யாழ்ப்பாண பூசாரி, பெரமுன நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கைது!

Date:

ஆராச்சிக்கட்டுவ, மானாவெரிய பிரதேசத்தில் உள்ள காணியில் புதையல் தேடி குழி தோண்டிக் கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாபம் நகரசபை உறுப்பினர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் யாழ்ப்பாணம், கண்டியைச் சேர்ந்த மேலும் மூவரே சிலாபம் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பூசாரியாவார்.

புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட கருவிகள், பலி கொடுக்கப்பட்ட இரண்டு கோழிகள் மற்றும் பிரசாத தட்டுகள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்கள் ஆராச்சிக்கட்டுவ, மானாவெரிய பிரதேசத்தில் புதையல் தேடி குழி தோண்டிக் கொண்டிருந்த போது, ​​இரகசிய தகவலையடுத்து பொலிசார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.

சந்தேக நபர்களை சிலாபம் நீதவான் ஏப்ரல் 20 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்