யாழில் லொறியில் சிக்கி 10 வயது சிறுவன் பலி: பொதுமக்கள் கொந்தளிப்பு!

Date:

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன் (10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் லொறியை தாக்கி சேதப்படுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்