ஹெரோயினுடன் இளைஞன் கைது!

Date:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை ஹொரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து நாவலடி இராணுவ சோதனை சாவடியில் வைத்து கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது 5020 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் காத்தான்குடியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே நாவலடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாழைச்சேனை இராணுவ புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் போதை வியாபாரத்தையும், பாவனையையும் இல்லாதொழிக்கும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்