26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ரெலோவும் புறக்கணிக்கிறது: ஜனாதிபதி -கூட்டமைப்பு சந்திப்பாகும் சர்வகட்சி கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது.

வரும் 23ஆம் திகதி சர்வகட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூர் விமர்சனங்களை சமாளிக்க, ஒரு சம்பிரதாயமாக கூட்டப்பட்ட கூட்டமாகவே இது கருதப்படுகிறது. அரசாங்கம் முடிவுகள் எடுக்கும் போது, தம்முடனேயே கலந்துரையாடுவதில்லையென பங்காளிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வரும் நிலையில், சர்வகட்சி கூட்டம் ஒரு சம்பிரதாயமாக அழைப்பாகவே கருதப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்ட கட்சிகளின் தலைவர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் பொருளாதார முடிவுகள் குறித்து உள்ளூரில் கேள்விகளும், விமர்சனங்களும் அதிகரித்து வரும் நிலையில், அரசு இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, இதில் நாம் பங்கேற்க மாட்டோம் என, அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான கட்சிகள் நிராகரித்து விட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி என்பன அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்திருந்தன.

அரசின் 10 பங்காளிக்கட்சிகள் சார்பில் இருவர் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தனர். வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் அழைப்பை நிராகரித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென முடிவு செய்துள்ளது.

இதேவேளை, கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) என்பன கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளன. இதன்படி, இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன் ஆகிய இருவரும் சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொள்வார்கள்.

ஜனாதிபதி அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டத்தை பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்துள்ளதால், அன்றைய தினம் பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பெரமுனவின் பங்காளிகள் சார்பில் இருவரும் கலந்து கொள்வார்கள்.

அத்துடன், கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

இதனால், ஜனாதிபதி அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டம், ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பாக சுருங்கும் என தெரிகிறது.

வரும் 25ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு கூட்டமைப்பினரை ஜனாதிபதி அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

இந்தியத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர தொடர் பேச்சு!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

Leave a Comment