Russia-Ukraine crisis: 23 ஆம் நாள்: ரஷ்யாவின் வான், ரொக்கட் தாக்குதல் தொடர்கிறது!

Date:

லிவிவ் விமான பழுதுபார்க்கும் ஆலையை ரஷ்யா தாக்கி அழித்துள்ளது.

 லிவிவ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த ஆலை தீப்பற்றி எரிந்தழிந்துள்ளது.

நகர மேயர் ஆண்ட்ரி சடோவி,  டெலிகிராமில் இதனை பதிவிட்டார்.

இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லையென்றார்.


ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், தலைநகர் கீவில் ரஷ்யப் படைகள் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவால் ஏவப்பட்ட ராக்கெட் ஒக்ஸானா தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவரது மறைவு செய்தியை ஒக்ஸானாவின் குழுவான யங் தியேட்டர் உறுதிப்படுத்தியது.

ஒக்ஸானாவுக்கு 67 வயது. உக்ரைனின் முக்கியமான கலைஞர் அவர்.

கடந்த வாரம், உக்ரைன் பாடகரும் இசையமைப்பாளருமான பாஷா லீ இர்பினில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.


டான்பாஸ் பகுதியின் மீது ரஷ்யா பறக்க தடை மண்டலத்தை (no-fly zone) அமைக்கிறது.

உக்ரைனிலிருந்து சுயாட்சி கோரிய டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.


சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ரஷ்ய கூட்டமைப்பு இணங்கவில்லை என்றால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஓலே நிகோலென்கோ கூறினார்.

“ரஷ்யா ஒரே நேரத்தில் இரண்டு நாற்காலிகளில் உட்கார விரும்புகிறது. ஒருபுறம், சர்வதேச நீதிமன்றத்தின் கட்டாய உத்தரவுக்கு இணங்காமல், மறுபுறம், சர்வதேச சட்டத்தின் சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் சர்வதேச சட்டம் நாயின் வாலை ஆட்டுவது போல் அசைக்க முடியாது.சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க மறுப்பதன் மூலம், ரஷ்யா ஐ.நா சாசனத்தின் கீழ் உள்ள அனைத்து உரிமைகளையும், முதன்மையாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள வீட்டோ உரிமையையும், அத்துடன் இராஜதந்திர சலுகை சக்தியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நிகோலென்கோ கூறினார்.


உக்ரைனின் இராணுவம் “எதிர்காலத்தில்” உக்ரேனிய தலைநகர் மீது ரஷ்ய தரைவழித் தாக்குதல் “சாத்தியமற்றது” என்று கூறுகிறது.

அனுபவம் வாய்ந்த தளபதிகளின் பற்றாக்குறை மற்றும் ரஷ்யப் படைகள் மத்தியில் அதிக உயிர்ச்சேதங்கள் மற்றும் குறைந்த மன உறுதியினால் இனி தலைநகர் மீதான தாக்குதல் சாத்தியமில்லையென்கிறது.

சிரியாவில் இருந்து வரும் கூலிப்படையை கொண்டு தங்கள் இழப்பை நிரப்ப ரஷ்யா முயற்சிப்பதாகவும், ஏற்கனவே 1,000 தன்னார்வலர்களை பணியமர்த்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்