தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும்படி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்றிரவு (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை 16 தடவைகள் கையாண்டிருப்பதால், இந்த வேளையில் அவர்களின் உதவியை நாடுவதில் சிக்கல் இருக்காது என்றும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
இதன்படி, அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று (15) இடம்பெறவுள்ள பொருளாதார சபை கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.