Pagetamil
இலங்கை

இன்று கட்டணம் செலுத்தப்பட்டதும் கப்பலில் இருந்து டீசல் இறக்கப்படும்!

இலங்கைக்கு வந்துள்ள டீசல் சரக்கு கப்பலிற்கு இன்று கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர், டீசலை இறக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பிலான விசேட விவாதத்தில் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லொகுகே, எரிபொருளுக்கான வரிசைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

33,000 மெட்ரிக் தொன் டீசல் இன்று இறக்கப்பட உள்ள நிலையில், நாட்டிற்கு நிலையான எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏற்றுமதிக்காக அரசாங்கம் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டியிருந்ததால், தேவையான வெளிநாட்டு கையிருப்பை உருவாக்குவதில் பல சிக்கல்கள் எழுந்தன என்று அமைச்சர் மேலும் கூறினார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா மோதலுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 130 அமெரிக்க டொலர்களாக உள்ளது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல், நாட்டின் நாளாந்த 7,000 மெட்ரிக் தொன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் விநியோகத்தை உரிய நேரத்தில் வந்து சேர்ப்பதை உறுதி செய்வதற்கான நீண்ட கால திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அமைச்சர்களின் கூற்றுக்கள் ஒருபோதும் யதார்த்தமாகாது என்பதை சுட்டிக்காட்டினார்.

எரிவாயு தொடர்பான கவலைகள் எழாது என்றும், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு ஒரு வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது எனக் கூறும் போது போதியளவு இருப்புக்கள் இருக்கும் என்றும் அரசாங்கம் பல வாரங்களுக்கு முன்னர் கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

எவ்வாறாயினும், எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மீண்டும் வரிசைகள் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதோ அல்லது அவர்களின் வேலைத்திட்டங்கள் மீதோ பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் இருளில் இருக்க இலங்கைக்கு வரமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமது இலக்கை அடைய முடியாது என்ற எண்ணம் பொதுமக்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் எரிவாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இனங்காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்ததாக நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அழகியவண்ணா தெரிவித்தார்.

எரிவாயு கசிவு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment