ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு கால்பந்து வீரன் டக்சன் பியூஸ்லஸிற்கு விடைகொடுத்தனர்: மன்னார் நகரில் முழுமையான கடையடைப்பு!

Date:

மாலைதீவில் உயிரை  மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் இன்று (7) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.

டக்சன் பியூஸ்லஸ் மாலைதீவு கழகமொன்றிற்காக ஆடி வந்த நிலையில் கடந்த மாதம் 26 திகதி உயிரை மாய்த்ததாக அந்த நாட்டு பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் பனங்கட்டு கொட்டு கிராமத்தைச் சேர்ந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடன் கடந்த 3ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அன்றைய தினம் பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை (7) மதியம் 1 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், விளையாட்டுக்கழக வீரர்கள், தேசிய கால்பந்தாட்ட அணி பிரதிநிதிகள், இளைஞர் கழக அங்கத்தவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 2.45 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து உடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடல் ஊர்வலமாக மன்னார் பொது சேமக்காலை க்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நல்லடக்கத்தையொட்டி இன்றைய தினம் திங்கட்கிழமை(7) மன்னார் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு துக்க நாள் அனுஸ்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்