கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவரை சிவில் உடையில் மோட்டார் சயிக்கிளில் வந்த பொலிசார் மோதித் தள்ளியுள்ளனர்.
காயமடைந்தவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோட முயன்ற பொலசார் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
இன்று(06) இரவு 07.45 மணியளவில் விபத்து இடம்பெற்றது.
பரந்தன்- முல்லைத்தீவு, ஏ 35 வீதியில், பரந்தன் சந்தி அண்மித்த பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பரந்தன் நோக்கி பயணித்த முதியவர் ஒருவரை, பின்னால் மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் வந்த பொலிசார மோதித் தள்ளியுள்ளனர்.
படுகாயம் அடைந்த முதியவரை அவ்விடத்தில் விட்டு தப்பி ஓட முற்பட்ட சமயம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
கிளிநொச்சி பொலிசார் விபத்தை மூடி மறைக்க முற்பட்டதாகவும், விபத்தை ஏற்படுத்திய பொலிசார் மது போதையில் இருந்தார்கள் என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் அமைதியின்மை ஏற்பட்டது
இதேவேளை காயமடந்த முதியவர் அவசர நோயாளலம மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.