27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரிணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

Leave a Comment