பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்டபிளான கணேசரட்ணம் ஹரிகரன் (24) என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நிமித்தம் யாழ்ப்பாணம் வந்து விட்டு , மன்னார் நோக்கி திரும்பும் வேளை பூநகரி – சங்குப்பிட்டி பாலம் கடந்து சற்று தொலைவில் , இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.