வவுனியா வைத்தியசாலையில் குழந்தைகள் மரணம்: வெளியான அதிர்ச்சிப் புள்ளி விபரம்!

Date:

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதுடன், 6 வருடங்களில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுவாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது வெளிநாட்டு கற்கைநெறியொன்றுக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.ராகுலன் அவர்களின் பதவி முத்திரையுடன் பெறப்பட்ட தகவலிலேயே இவ் அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கோரப்பட்டிருந்தது. அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2016 ஆம் ஆண்டு 47 குழந்தைகளும், 2017 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2018 ஆம் ஆண்டு 58 குழந்தைகளும், 2019 ஆம் ஆண்டு 52 குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு 48 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு 73 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

அதில், 2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் முன் அல்லது பிறக்கும் போது விடுதி 5 இல் 8 குழந்தைகளும், விடுதி 7 இல் 16 குழந்தைகளும், குழந்தை பிறந்த பின் விடுதி 7 இல் 3 குழந்தைகளும், குழந்தைகளுக்கான விசேட அவசர சிகிச்சைப் பிரிவில் 46 குழந்தைகளுமாக 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். கடந்த 6 வருடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரித்த சிசு மரணமாக இது பதிவாகியுள்ளதுடன், மொத்த சிசு மரணங்களிலும் 2021 ஆம் ஆண்டே அதிக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

சுகாதார, மருத்துவ துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் 73 குழந்தைகள் 12 மாதங்களில் இறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக வவுனியா சிவில் செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குழந்தை மரணமடைந்தமை தொடர்பில் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்