இன்று முதல் சமுர்த்திக் கொடுப்பனவு அதிகரிக்கிறது!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு இன்று முதல் 28% அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன்படி 2022 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு 65,000 மில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ரூ.3,500 பெற்றுக் கொண்டிருந்த குடும்ப அலகுக்கு ரூ.4,500 உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

1,500 ரூபாவைப் பெற்ற குடும்ப அலகுக்கு, 1,900 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

இதன்படி நாடளாவிய ரீதியில் சமுர்த்தி நன்மை பெறும் 1,767,000 குடும்பங்கள் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை இன்று முதல் பெற்றுக்கொள்ளவுள்ளன.

இதேவேளை, மாத்தறை டிக்வெல்ல பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடு தற்போது பல பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் சலுகைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

சமுர்த்தி பயனாளிகள் நாட்டிலேயே மிகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள் எனத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அனைத்து சமுர்த்தி பயனாளிகளுக்கும் சமுர்த்தி உதவி அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாடு நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கும் வேளையில் சமுர்த்தி உதவி அதிகரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு அனர்த்தத்தின் போது நாட்டின் குடிமக்களையும் குழந்தைகளையும் எவ்வாறு பாதுகாத்தது மற்றும் நிலைமையை சமாளித்தது என்பதை ஆராய்வதே அரசாங்கத்தின் வெற்றியை தீர்மானிக்க சிறந்த வழிமுறையாகும் என அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடந்த இரண்டு வருடங்களில் உலகளவில் வருமான வழிகள் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் மாத்திரம் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இந்த தொற்றுநோய் ஏற்பட்டதா என்று பொதுமக்கள் ஆச்சரியப்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் விஜேசேகர கூறினார்.

எவ்வாறாயினும், எரிவாயு மற்றும் எரிபொருளானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாததால் அவற்றின் விலைகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிக்கப்படாவிட்டால் அது பொருளாதாரத்தை பாதிக்கும் என இராஜாங்க அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எனவே விலையை உயர்த்த வேண்டும் என்றார்.

விலை அதிகரிப்புக்கு ஏற்ப வருமான ஆதாரங்களை அதிகரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வருட சதி: பிள்ளையானுக்கு எல்லாம் தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது...

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்