சுகாதார தொழிற்சங்க போராட்டம் 8வது நாளில்!

Date:

சுகாதார தொழிற்சங்கங்கள் தற்போது முன்னெடுத்து வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்வகிறது.

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் இன்று கூடவுள்ளன.

சுகாதார வல்லுனர்களின்தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ், வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.

எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகத்தின் முன் புகார் அளிக்க தயாராக உள்ளது என்று குமுதேஷ் கூறினார்.

அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்திற்கு எதிரான தடை உத்தரவை பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த போது, அவர் கலந்துரையாடல்களைத் தவிர்த்து, தொழிற்சங்க நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்களை தள்ளி, சட்டப் பிணைப்பில் பணியில் ஈடுபடுத்த முயற்சித்தார் என்பது தெளிவாகிறது என தெரிவித்தார்.

எனவே அடக்குமுறையை எதிர்கொள்வதற்காக விசேட செயற்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களிடமும் அங்கீகாரம் பெறுவதற்காக இன்று கொழும்பில் விசேட பொதுக்கூட்டம் ஒன்று அழைக்கப்பட்டுள்ளதாக குமுதேஷ் தெரிவித்தார்.

பெப்ரவரி 7ஆம் திகதி காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை சுகாதார அமைச்சு வழங்கத் தவறியதாகவும், எனினும் 8ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் வழங்கியதாகவும், கடந்த 10ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை கொண்டுவந்து 12ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிட்டது.

இது திட்டமிட்ட முயற்சி என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குமுதேஷ் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்