சஷி வீரவன்ச மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம்!

Date:

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வழக்கின் சாட்சிய விசாரணைகள் முடிந்ததையடுத்து, இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சசி வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோத தொலைக்காட்சி பரிவர்த்தனை நிலையம் முற்றுகை

இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இரகசியமாக...

குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறதா?: காசல் மகளிர் மருத்துவமனை விளக்கம்!

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்