Pagetamil
சினிமா

67வது தேசிய விருதுகள்: தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான், நாக விஷால் அசத்தல்!

67வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார். ’ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கடந்த வருடம் கொரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தெரிவாக தனுஷ், இவ்விருதை ’போஸ்லே’ திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்கிறார். தனுஷ் ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment