நாயகியை மையப்படுத்தும் கதையில் ஹன்சிகா; தயாரிப்பாளர் ஆகிறார் ‘வாலு’ இயக்குநர்

Date:

ஹன்சிகா நடிக்கவுள்ள புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

சிம்பு நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். தனது அடுத்தப் படத்திற்காக மும்முரமாக கதையை எழுதி வருகிறார்.

இதனிடையே, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் விஜய் சந்தர். இவர் தயாரிக்கும் படத்தில் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளது.

இந்தப் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கவுள்ளார்.

தற்போது படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்