நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Date:

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

முக கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். அவருக்கு பாதிப்பு இருப்பது பற்றி அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் செய்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் திகதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...

நடிகை ட்விஷா செலவுக்குக் கூட கணவர் பணம் தரவில்லை: சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் தகவல்

நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில்...

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை” – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்