ஓமந்தை – வேப்பங்குளம் பகுதியில் வீடு உடைத்து நகை, பணம் திருட்டு

Date:

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் பட்டப் பகலில் வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் தேவை நிமிர்தம் வெளியில் சென்ற நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றினை திருடிச்சென்றுள்ளனர். மாலை நேரம் வீட்டு உரிமையாளர் வீடு திரும்பிய சமயத்தில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததுடன், 1000 ரூபா பணமும் வீட்டு வாயிலில் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்து பணமும், பெறுமதியான நகைகளும் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மக்களை ஏமாற்றும் கடற்தொழில் அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும்...

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்