யாழில் இளம்பெண்களின் நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது!

Date:

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இதனடிப்படையில், புத்தூரைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 7 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் நகர நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்