24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

18.1.2022 அமைச்சரவை கூட்ட முடிவுகள்!

18.01.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. நகர அபிவிருத்திக்குச் சொந்தமான ஜாஎல, ஏக்கலயில் அமைந்துள்ள காணியை விநியோக வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்கல்

திட்டமிடல், நிர்மாணித்தல், நிதியிடல், உரிமை, தொழிற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் நகர அபிவிருத்திக்குச் சொந்தமான ஜாஎல, ஏக்கலயில் அமைந்துள்ள 36 ஏக்கர் 01 ரூட் 27.6 பேர்ச்சர்ஸ் காணியொன்று விநியோக வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக போட்டி அடிப்படையில் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மற்றும் நிதி முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ள அக்சஸ் லொஜிஸ்ரிக் பார்க் (தனியார்) கம்பனிக்கு குறித்த காணியை அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பின் பிரகாரம் நீண்;டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குவவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களனி, முதுன் எலயில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை மின்சார உப நிலையமொன்றை அமைப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்
களனி பேலியகொடை பிரதேசத்தில் மின்மாற்றித் தொகுதியை வலுப்படுத்துவதற்காக புதிய உப மின்நிலையமொன்றை அமைப்பதற்காக களனிப் பிரதேசத்தில் காணித்துண்டொன்றை வழங்குமாறு மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனி நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியுள்ளன. அதற்கமைய, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் முதுன் எல அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியில் 02 ரூட் 26.5 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பின் பிரகாரம் நீண்;டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சார சபைக்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சோலைக்காடு எனும் பெயருடைய காணியை அரச அலுவலர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைத்தல்
வவுனியா பிரதேச செயலகப் பிரதேசத்தில் ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 92.92 ஹெக்ரெயார் (234 ஏக்கர் 02 ரூட் 10 பேர்ச்சர்ஸ்) அளவு கொண்ட காணியில் அரச அலுவலர்களுக்கான வீடமைப்புக் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் அக்காணியில் 711 காணித் துண்டுகள் பிரதேச செயலாளரின் பரிந்துரைக்கமைய அடையாளங் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 215 குடும்பங்களுக்கு வீடமைப்புக்காக 500,000/-ரூபாய்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 09 வருடங்கள் கடந்தாலும் குறித்த பயனாளிகளுக்கு இதுவரை அக்காணிகளுக்கான உறுதி வழங்கப்படவில்லை. அதனால், குறித்த பயனாளிகளுக்கு காணி உரிமமாற்று உறுதிப்பத்திரங்களை வழங்கும் வகையில் குறித்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கொம்பனித்தெரு, கொழும்பு 02 இல் அமைந்துள்ள ‘மெட்ரோ ஹோம்ஸ் ரெசிடன்சீஸ்’ வீடமைப்புக் கருத்திட்டத்தின் வீட்டு அலகுகளை உரிமப் பரிமாற்ற அடிப்படையில் விற்பனை செய்தல்
நகர அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொம்பனித்தெரு மீள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்ட காணித்துண்டில் ஆரம்பக் குடியிருப்பாளர்களுக்கான வதிவிட மற்றும் வர்த்தக அலகுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அதன் கீழ் மூன்று கோபுரங்களுடன் கூடிய 626 வீட்டு அலகுகள் மற்றும் 115 வர்த்தக அலகுகளுடன் கூடிய கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அது ‘மெட்ரோ ஹோம்ஸ் ரெசிடன்சீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பக் குடியிருப்பாளர்களைக் குறித்த வீட்டு அலகுகளில் குடியமர்த்திய பின்னர் எஞ்சிய 78 வீட்டு அலகுகள் அரச பிரதான விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டுக்கமைய சமகால சந்தைப் பெறுமதிக்கு முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் சரியான பெறுமதியை செலுத்தியுள்ள கொள்வனவாளர்களுக்கு உரிமமாற்று உறுதிகளை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திற்கும் ( The Northumbria University, England ) இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
உருகுணை பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. நிபுணத்துவக் கருத்துப் பரிமாற்றல், தெரிவு செய்யப்பட்ட பாடவிதானங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் உருகுணை பல்கலைக்கழகத்தில் தகைமை பெற்ற மாணவர்களுக்கு நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி திட்டங்களுக்கான முற்கூட்டிய அனுமதிகளை வழங்கல் போன்ற துறைகள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணியின் சட்டபூர்வமான உரித்தை கூட்டுத்தாபனத்திற்கு வழங்கல்
கொழும்பு 07, டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள 3.37 ஹெக்ரெயார் காணியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இயங்கி வருவதுடன், குறித்த காணிக்கான சட்டபூர்வமான உரிமை கூட்டுத்தாபனத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை. குறித்த காணியை கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கமைய, குறித்த காணியை விடுவிப்பு வழங்கல் பத்திரத்தின் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் திருகோணமலை குச்சவெளி ஒலிபரப்பு நிலையம் அமைந்துள்ள காணியை ஒப்படைத்தல்
இலங்கை அரசாங்கத்திற்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் ஒலிபரப்புச் சேவையான டொயிஸ்வெல் நிறுவனத்திற்கும் இடையில் 1980 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் ‘ஜேர்மன் குரல்’ வானொலி சிற்றலை மற்றும் மத்திய அலைவரிசை ஒலிபரப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு குறித்த ஒலிபரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் உரிமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணியின் 90% வீதமான பகுதி ஒலிபரப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒலிபரப்புச் சேவைகளுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் சூரிய மின்னுற்பத்திக்கு குறித்த காணியைப் பயன்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வருமானம் கிடைக்கக் கூடிய வழிமுறையாக குறித்த காணியில் சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் குறித்த காணியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. மில்லனிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள றயிகம பசுமைக் கைத்தொழில் பேட்டையில் மெக்சன்ஸ் (தனியார்) கம்பனிக்கு காணித்துண்டொன்றை வழங்கல்
நாடு முழுவதும் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் தொழிற்சாலைகளை நிறுவுதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2021 யூன் மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 50 வருடங்கள் அனுபவம் வாய்ந்த, தரை ஓடுகள் ( Tile ) தொழிற்றுறையில் முன்னணி கம்பனியாக திகழும் மெக்சன்ஸ் பாத்வெயார் (தனியார்) கம்பனி கிட்டத்தட்ட 6,000 மில்லியன் ரூபாய்கள் முதலீட்டுடன் கூடிய தரை ஓடுகள் ( Tile), குளியலறை உபகரணங்கள் மற்றும் துப்பரவாக்கல் உபகரணங்கள் உற்பத்திக்கான தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்காக கருத்திட்ட யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவில் கைத்தொழில் மற்றும் தொழிநுட்ப வலயமொன்றை (றயிகம பசுமை கைத்தொழில் பேட்டை) நிர்மாணிப்பதற்காக தற்போது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிவ் வெடல் தோட்டம் காணித்துண்டுடன் இணைந்துள்ளதும், அபிவிருத்தி செய்யப்படாததுமான காணித்துண்டில் 20 ஏக்கர் காணிகளை 35 வருடங்கள் நீண்டகால குத்தகை அடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்காக மெக்சன்ஸ் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. சிறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இறப்பர் தோட்டங்களைப் புத்துயிரூட்டும் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிதி வழங்கும் வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை நீடித்தல்
விவசாய அபிவிருத்திகான சர்வதேச நிதியத்தின் நிதியனுசரணையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் சிறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இறப்பர் தோட்டங்களைப் புத்துயிரூட்டும் கருத்திட்டத்தின் கீழ் இலக்காகக் கொண்ட பயனாளிகளின் வருமான ஈட்டலுக்காகவும், சந்தைப் பன்முகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான கிராமிய நிதி வழங்கும் வேலைத்திட்டமொன்று 2019-2021 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கொவிட் 19 பெருந்தொற்று நிலைமையால் கருத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளமையால், குறித்த கடன் வழங்கும் வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை 2022 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரைக்கும் நீடிப்பதற்காக பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்புக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த சட்டகத்தின் கீழ் புதிய மேம்பாலங்களை நிர்மாணித்தல்
எமது நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஹங்கேரியாவின் எக்ஸிம் வங்கியின் மூலம் சலுகைக் கடன் வசதியளிப்பதற்கு ஹங்கேரி அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிதி ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்கீழ் கொஹூவல மற்றும் கெட்டம்பே மேம்பாலங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த கருத்திட்டங்களுக்கு அப்பால் தேசிய வீதி வலையமைப்பில் முத்தெட்டுகல புகையிரதக் கடவை மற்றும் ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மாரிஸ்டெலா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி போன்ற இடங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு வழங்குவதற்காக குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த இடங்களில் மேம்பாலங்கள் 04 இனை அமைப்பதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டம் (139 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்தல்
கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீர் விபத்துக்களால் பாதிக்கபடும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் அனுகூலங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்காக 1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்டம் (139 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமை சொத்து சட்டத்தை திருத்தம் செய்தல்
2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமை சொத்து சட்டத்தை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்காக  2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment