24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
ஆன்மிகம்

யாருக்கெல்லாம் திருமணம் தாமதமாகும்?: ஜோதிடத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

செவ்வாய் லக்கினத்தில் இருந்து என்ன வருகின்ற 2, 4, 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு வகையான விதிவிலக்குகள் உள்ளன. அவைகளை வெறுத்து எழுதினால் பக்கம் பக்கமாக இதையே எழுதிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எனவே இந்த செவ்வாய் தோஷம் என்பது மிக முக்கியமான திருமண தாமதத்திற்கான காரணம் ஆகும்.

ராகு அல்லது கேது லக்னம் 2 7 8 ஆகிய இடங்களில் தனிமையில் அமர்ந்து இருந்தால் அவர்களுடைய திசை நடக்கும் போது திருமணம் காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

லக்கினத்திலோ 7ஆம் இடத்திலோ சனி அமர்ந்து இருக்கும். பட்சத்தில் இவர்களுக்குத் தாமதமான திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

சனி மற்றும் செவ்வாய் இணைந்து லக்கினத்திலோ 7ஆம் இடத்திலோ அல்லது 8ஆம்இடத்திலும் அமர்ந்து இருக்குமாயின் இவர்களுக்குத் திருமணம் தாமதமாகும்.

சனி செவ்வாய் பார்வை 2ஆம் இடத்திலோ 7ஆம் இடத்திலோ அல்லது 8ஆம் இடத்திலோ இணையும் பட்சத்தில் இவர்களுக்குத் திருமணம் தாமதமாக வாய்ப்பு உண்டு.

7ஆம் இடத்து அதிபதியோ அல்லது 2ஆம் இடத்து அதிபதியும், சனி ராகு கேதுவுடன் சேர்ந்து இருப்பது திருமண தாமதத்தை உருவாக்கும்.

7ஆம் இடத்து அதிபதி 7ஆம் இடத்து அதிபதி ஆகிய இருவரில் ஒருவர் 6 8 12ல் மறைந்து அல்லது நீசம் பெற்று இருந்தாள் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

7ஆம் இடத்திலும் 2ஆம் இடத்திலும், நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

2ஆம் இடத்து அதிபதியும் 7ஆம் இடத்து அதிபதியும், 5ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

6, 8, 12 ஆம் இடத்து அதிபதிகள் 7ஆம் இடத்தில் அல்லது 2ஆம் இடத்தில் இருந்தாள் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

லக்கினத்திற்குப் பாதகாதிபதியான கிரகங்கள் 7ஆம் இடத்திலும், 2ஆம் இடத்திலும், அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

இம்மாதிரியான கிரகச் சேர்க்கைகள் உள்ள ஜாதகங்களில் ஆண் ஜாதகமாக இருந்தால் திருமணம் என்பது குறைந்தது 30 அல்லது 32 வயதிற்கு மேல்தான் நடக்கிறது. பெண்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 26- 29 இந்த வயதுகளில் தான் திருமணம் நடைபெறுகிறது. திருமண தடை பரிகாரங்கள் செய்தாலும் தாமதத்தை தவிர்க்க முடிவதில்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment