‘வெறும் ஊடக சந்திப்பு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்காமல், பயனுள்ள போராட்டங்களை செய்யுங்கள்’: தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மனோ கணேசன் எம்.பி அறிவுரை!

Date:

தமிழ் அரசியல் தரப்பில் தமது தரப்பு மட்டுமே தியாகிகள், ஏனைய தரப்புக்கள் அனைத்தும் துரோகிகள் என்ற ‘விசித்திர அரசியல்’ மேற்கொண்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பிற்கு சூடு வைப்பதை போன்ற அழைப்பொன்றை விடுத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.

13வது திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக கஜேந்தரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பாக, மனோ கணேசன் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

வெறும் ஊடக சந்திப்பு போராட்டத்தை மட்டும் நடத்தாமல், 13வது திருத்தத்திற்கு எதிராக ஒருநாள் போராட்டம் நடத்தாமல், பயனுள்ள – தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். வெறும் அறிக்கை அரசியலால் எதுவும் ஆகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது பேஸ்புக் பதிவில்-

நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும்.
“13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்” என்றால் மாற்று பயணம் இருக்க வேண்டும்.
புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால் நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாளாவிருக்க இல்லை.

புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்று பயண திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.

2005 முதல் 2009 வரை இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வட-கிழக்கு புலத்து உடன்பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய “மக்கள் கண்காணிப்பு குழு” என்ற மனித உரிமை இயக்கமும் தெருப்போராட்டங்களை, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தி போராடினோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்தபடி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை.

இது இங்கே “சிங்கத்தின் குகையில்” இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப்போராட்ட வரலாறு.

ஆகவே,”13 என்பது முதல்படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்” என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

13க்கு அப்பால் செல்லும் அந்த மாற்று பயணம் “ஊடக சந்திப்புகளுக்கு” அப்பால் செல்ல வேண்டும்.

ஊடகங்களை சந்தித்து, “அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகிறான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்” என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல.

ஆகவே, நண்பர் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன்.

அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்