கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (16) உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,211 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 10 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பேரும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 4 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.




