பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு

Date:

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இன்று (12) காலை சுமார் இரண்டடி நீளமான சிறுத்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த  சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.

குறித்த உயிரிழந்த சிறுத்தை தொடர்பாக கம்பளை வனஜீவராசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் தேசிய ஷூரா கவுன்சில் வேண்டுகோள்

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC), இலங்கை குடிமகனான சிவராசா அனுஜன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்