24.9 C
Jaffna
January 20, 2025
Pagetamil
உலகம்

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதி முகாமில் பெரும் தீ விபத்து: 1,200 குடியிருப்புக்கள் அழிந்தன!

பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் முகாமின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 1,200 குடிசைகள் எரிந்தழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் குடியிருப்பை இழந்தனர்.

காக்ஸ் பஜாரின் உக்கியாவில் உள்ள அகதிகள் முகாமிலேயே தீ விபத்து ஏற்பட்டது.

மூங்கில், தார் பூசிய கித்தான் துணி போன்றவற்றால் அமைக்கப்பட்ட முகாமின் பகுதிகளில் தீ மிக விரைவில் பரவியது.

இருப்பினும் சுமார் 2 மணி நேரத்துக்குள் முகாமில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததை தொடர்ந்து இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. வீடுகள், பாடசாலைகள், மருத்துவ மையங்கள் அழிந்துள்ளன.

மியன்மாரிலிருந்து தப்பி வந்த ரோஹிங்கியா இனத்தவர்கள், 2017ஆம் ஆண்டு முதல் காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 850,000 ரோஹிங்கியாக்கள் தங்கியிருக்கின்றனர்.

பங்களாதேஷிலுள்ள வசதியற்ற ரோஹிங்கியா அகதி முகாம்களில் அடிக்கடி தீவிபத்து நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

Leave a Comment