25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கழுத்து வெட்டும் சைகை விவகாரம்: இலங்கை இராணுவ அதிகாரியை விடுவித்தது பிரித்தானிய உயர்நீதிமன்றம்; வழக்கு செலவை தமிழர்களே செலுத்த வேண்டும்!

தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

தன் மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்து, நேற்று (19) இந்த தீர்ப்பை அளித்தது.

“பெப்ரவரி 4, 2018 அன்று இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன் போராட்டங்களை நடத்திய புலிகள் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களான பிரதிவாதிகள், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவுக்கு வழக்கு செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது“ என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகராயத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை, கழுத்தை வெட்டுவேன் என்ற பாணியில் பிரியங்க பெர்ணான்டோ கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதே கருத்தை பிரதிபலித்து, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றம், 2019 டிசம்பர் 6 அன்று, மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு இராஜதந்திர விலக்கு அளிக்கவும் மறுத்தது.

எனினும், உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளின் வாதங்களை நிராகரித்தது. மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவின் சார்பாக வாதங்களை ஏற்றுக்கொண்டது. 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையில் குறிப்பிட்டதை போல இராஜதந்திர விலக்கு குறித்த பாரம்பரியக் கருத்துக்களை உறுதிப்படுத்தியது. இலங்கை, பிரிட்டன் என்பன நாடுகளாக, இந்த இராஜதந்திர விலக்கை உறுதி செய்துள்ளது.

வியன்னா மாநாட்டின் செயல்திறன் பெரும்பாலான ஒப்பந்தங்களை விடவும், அதன் பரஸ்பர செயல்பாட்டைப் பொறுத்தது என்று நீதிமன்றம் கூறியது. வியன்னா மாநாட்டின் பிரிவு 47.2 எந்தவொரு நாட்டிற்கும் அனுப்பும் நாட்டின் இராஜதந்திர முகவர்களுக்கு ஒரு விதிமுறையைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கிறது.

பிரிட்டனில் வெளிநாட்டு இராஜதந்திர பணியாளர்களுக்கு இராஜதந்திர விலக்கை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நோக்கம், பிரிட்டிஷ் இராஜதந்திர பணியாளர்கள் வேறு இடங்களில் தொடர்புடைய இராஜதந்திர விலக்கை அனுபவிப்பதை உறுதி செய்வதாகும்.

இங்கிலாந்தின் இராஜதந்திர ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் சமமான பாதுகாப்பிற்கு ஈடாக, இராஜதந்திர விலக்கு என்ற கோட்பாடு இங்கிலாந்தில் உள்ள அனைத்து இராஜதந்திர ஊழியர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்களும் மீட்பு!

Pagetamil

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒரே பார்வையில் இலங்கைப் பாதிப்பு விபரம்!

Pagetamil

Leave a Comment