26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
உலகம்

நாடு விட்டு நாடு சென்று 20 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்த மாபியா கும்பல் தலைவன்: Google Map இனால் சிக்கிய சுவாரஸ்யம்!

10 வருடங்களாக தனது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை கூட மேற்கொள்ளாமல், 20 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இத்தாலிய மாபியா குழு தலைவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூகிள் வரைபட (Google Maps) சேவையின் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலமே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின், சிசிலியைச் சேர்ந்த 61 வயதான முன்னாள் மாஃபியா குழு தலைவர் ஜூவாக்கினோ கேம்மினோ, இத்தாலியின் உள்துறை அமைச்சகத்தால் ஆபத்தான தப்பியோடியவராக பட்டியலிடப்பட்டுள்ளார்.

Stidda எனும் இத்தாலிய மாபியா குழுவை அவர் வழிநடத்தினார். கொலைக் குற்றவாளியாக அவர், ஸ்பெயினின் மாட்ரிட் அருகே உள்ள கலாபகர் என்ற நகரத்தில் கைது செய்யப்பட்டார். அங்கு அவர் திருமணம் செய்து, மானுவல் என்று தனது பெயரை மாற்றி, சமையல்காரராக வேலை செய்தார் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறி கடை வைத்திருந்தார்.

20 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்ததால், சிசிலியுடன் தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டதாக காமினோ நினைத்தார். அவரை பொலிசார் சுற்றிவளைத்த போது, அவர் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தன்னை பிடிக்க வந்த பொலிசாரிடம் அவர் கேட்ட கேள்வி-  “என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்? நான் 10 வருடங்களாக என் குடும்பத்தாரைக் கூட தொலைபேசியில் அழைக்கவில்லையே’ என.

சிசிலியின் அக்ரிஜென்டோவில் Stidda என்ற மாஃபியா குழுவை வழிநடத்தினார். 1990 களில் சிசிலியின் முக்கிய மாஃபியா நெட்வொர்க்கான கோசா நோஸ்ட்ராவுடன் கொடூரமான இரத்தக்களரி சண்டையில் ஈடுபட்டது. நீதிபதியொருவரை கார் வெடிகுண்டு தாக்குதலில் கொன்ற விவகாரத்தில் 1992 ஆம் ஆண்டு முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையிலிருந்து தப்பித்தார்.

கொலை மற்றும் பல்வேறு மாஃபியா தொடர்பான குற்றங்களுக்காக 1998 இல் பார்சிலோனாவில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார். அவர் ரோமில் உள்ள ரெபிபியா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். அவருக்கு 2003 ஆம் ஆண்டில் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், சிறைச்சாலையிலிருந்து அவர் 2002ஆம் ஆண்டு தப்பிச் சென்றிருந்தார்.

61 வயதான காமினோவைத் தேடுவதில் சிசிலியன் பொலிசார் பல விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் 2014 இல் ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

Google Maps மூலம் அணுகக்கூடிய வழிசெலுத்தல் கருவி, கலபாகரில் உள்ள El Huerto de Manu அல்லது Manu’s Garden என்ற பழம் மற்றும் காய்கறி கடைக்கு வெளியே இரண்டு ஆண்கள் அரட்டை அடிப்பதைப் படம் பிடித்தது.

அதனை, எதேச்சையாக பார்த்த சிசிலியன் பொலிசார், அவர்களில் ஒருவர் காமினோவை ஒத்திருப்பதை போல அவதானித்தனர்.

பொலிசார் மேலும் ஆராய்ந்த போது, லா கோசினா டி மானு அல்லது மானுஸ் கிச்சன் எனப்படும் வர்த்தக நிலையங்கள் இப்போது இயங்குவதில்லை என்பது தெரிய வந்தது..

ஆனால் லா கோசினா டி மானுவுக்காக பேஸ்புக் பக்கம் இன்னும் இருப்பதை பொலிசார் கண்டறிந்தனர். அதற்குள் இருக்கும் புகைப்படங்களை ஆராய்ந்த போது,சமையல்காரர் உடையில் காமினோவின் புகைப்படத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.

காமினோவின் இடது கன்னத்தின் இருக்கும் தழும்பினால் அவர் அடையாளம் காணப்பட்டார். உணவகத்தின் மெனுவில் Cena Siciliana அல்லது Sicilian டின்னர் எனப்படும் இத்தாலிய டிஷ் இருந்தது.

காமினோ டிசம்பர் 17 அன்று கைது செய்யப்பட்டார். ஆனால் புதன் கிழமை நீதிமன்றத்தில் இத்தாலிய அதிகாரிகள் இந்த விடயத்தை தெரிவித்தபோது, விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

தப்பியோடிய ஒரு மாஃபியா குழு உறுப்பினர் வலைத்தளத்தின் உதவியுடன் பிடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதம், யூடியூப் சமையல் வீடியோக்களில் தோன்றிய பின்னர் மார்க் ஃபெரன் கிளாட் பியார்ட் என்ற குற்றவாளி கரீபியனில் பிடிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு முதல், நெதர்லாந்தில் கோகோயின் கடத்தியதற்காக ‘என்ட்ராங்கெட்டா மாஃபியா குழுவின் உறுப்பினரை, இத்தாலிய அதிகாரிகள் கைது செய்ய முயன்ற போது, பயார்ட் தப்பி ஓடிவிட்டார்.

அவர் கைது செய்யப்படும் வரை, டொமினிகன் குடியரசில் உள்ள போகா சிகாவில் உள்ள இத்தாலிய வெளிநாட்டவர் சமூகத்தில் பையார்ட் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தும் யூடியூப் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். ஆனால், அவரது முகத்தை ஒருபோதும் காட்டவில்லை என்றாலும், அவரது உடலில் உள்ள தனித்துவமான பச்சை குத்திய அடையாளங்கள், அவரை பொலிசாரிடம் அடையாளம் காட்டியது.

2019 ஆம் ஆண்டில், நேபிள்ஸின் புறநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது இரண்டு பூனைகளுடன் அமர்ந்து பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவரையும், அவரை சூழ்ந்திருந்த மாஃபியா கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

east tamil

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

Leave a Comment