நாட்டில் இன்று இதுவரை 588 நபர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் இதுவரை பதிவான தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 590,651 ஆக அதிகரித்துள்ளது.
13,995 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, கொரோனா தொற்றினால் 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,099 ஆக அதிகரித்துள்ளது.
8 ஆண்களும் 8 பெண்களும் நேற்று மரணித்தனர்.
2 ஆண்களும் 2 பெண்களும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 6 ஆண்களும் 6 பெண்களும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1