முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளரை ஆதரித்தமைக்காக வெட்கப்படுவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாந்தை கிழக்கு பிரதேச உபதவிசாளருமான சிந்துஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது,
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தவிசாளர் பெருமளவான காணிகளைஅடாத்தாக ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அந்த காணிகளுக்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்தள்ளமை மற்றும் அரசியல் செல்வாக்கில் சட்ட ரீதியற்ற ஆவணங்களை பெற்றுள்ளமை தெடர்பில் பல்வேறு முறைப்பாடுக்ள் செய்யப்பட்டு இது தொடரபான விசாரணை கூட இடம்பெறுகின்றது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் இது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளாகும். அத்தோடு அதிகாரிகள் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இதே வேளை பெருமளவான காணிகளை பொதுமக்களுக்கு வழங்குவதாக துப்பரவு செய்து அவற்றை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காக சில அதிகாரிகள் மீது சேறுபூசும் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றார்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தங்களுடைய காணிகளுக்கு ஆவணங்களை பெறுவது தொடர்பிலேயே கதைத்தார்களே தவிர வனவள திணைக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து காணியற்ற மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எதனையும் பேசவி்ல்லை என்றார்.




