மன்னார் அரச பேருந்துக்குள் வயோதிபர் திடீர் மரணம்!

Date:

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

-இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்