மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி!

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக விக்கும் அதுல களுஆராச்சி இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி, கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

அவர் தனது 33 வருட சேவையின் போது 27 ஆண்டுகள் நீதிவான் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி, குற்றவியல் உயர் நீதிமன்றம் மற்றும் சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதியும் ஆவார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்