கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களும் கண்காணிப்பு

Date:

போலீஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க குடியேற்றப் பிரிவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற விடுமுறை காரணமாக இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க குடியேற்றப் பிரிவுக்கு விருதுநகர் போலீஸார் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களுக்கும் ராஜேந்திர பாலாஜி படம் மற்றும் அவரைப் பற்றிய விவரங்கள் அனுப்பப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்