இணையவழி கல்விக்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த கையடக்க தொலைபேசியை விற்று, அந்த பணத்தில், தனது சக வகுப்பு காதலியுடன் ஹொட்டல் அறையில் தங்கியிருந்த 15 வயது மாணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது அண்ணனின் அடையாள அட்டையை பாவித்தே அவர் ஹொட்டல் அறையை பதிவு செய்துள்ளார்.
கம்பளை பகுதியை சேர்ந்த காதல் பட்சிகளான பாடசாலை மாணவர்கள் இருவரே, இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
கம்பளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் ஒருவர், அருகிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதான பாடசாலை மாணவியொருவரை கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி மேலதிக வகுப்பிற்குச் சென்ற இருவரும், அங்கிருந்து புறப்பட்டு நாவலப்பிட்டி பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு சென்று மாலையை அங்கேயே கழித்துள்ளனர். அன்றைய தினம் இருவரும் நுவரெலியா சென்றுள்ளனர்.
இணையவழி கல்விக்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த கையடக்க தொலைபேசியை விற்றே, இந்த காதல் சுற்றுலாவிற்கான பணத்தை மாணவன் திரட்டியுள்ளார்.
அன்றைய இரவு நுவரெலியாவிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்றனர்.
சிறார்களுக்கு ஹொட்டல் அறைகள் வழங்கப்படுவதில்லை என்பதை அறிந்திருந்த அந்த மாணவன், முன்னேற்பாடாக, தன்னைப் போன்ற தோற்றமுடைய அண்ணனின் தேசிய அடையாள அட்டையை திருடிக் கொண்டு வந்திருந்தார். 18 வயதிற்கு மேற்பட்டவர் என அண்ணனின் தேசிய அடையாள அட்டையை கொடுத்து பதிவு செய்து, அறையை பெற்றுள்ளார்.
மேலதிக வகுப்பிற்கு சென்ற மகள் வீடு திரும்பாததையடுத்து, தாயார் கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் மாணவி வீடு திரும்பினார். அவரிடம் நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையில், அந்த ஜோடி காதல் சுற்றுலா சென்றது தெரியவந்துள்ளது. அத்துடன், காதல் ஜோடி பாலுறவும் கொண்டிருந்தனர்.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவனை கைது செய்த பொலிசார், கம்பளை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஷினித் விஜேசேகரவின் முன்னிலையில் முற்படுத்தினர். மாணவனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை உடுநுவர வெலம்பொட சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.