மாவடிப்பள்ளியில் வித்தியாரம்ப விழா

Date:

மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025ம் ஆண்டுக்கான வித்தியாரம்ப விழா இன்று (30) கோலாகலமாக நடைபெற்றது.

கல்முனை வலயத்திற்குட்பட்ட காரைதீவு கல்வி கோட்டத்தின் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய கணிதப் பாட பிரதிக் கல்வி பணிப்பாளர் மற்றும் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசக இணைப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹான்கீர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எஸ்.எம்.அஹமெட்லெப்பை, எஸ்.எம்.சுஹுறுடீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில் உரையாற்றிய கௌரவ அதிதிகள், ஆரம்பக் கல்வி ஒரு பிள்ளையின் எதிர்காலத்துக்கான அடிப்படை என்பதைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் உடல், உள வயதிற்கு ஏற்ப முறையான கல்வி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், கல்வியின் மூலம் நற்பண்புகளும் பண்புசார் வளர்ச்சியும் பெற்ற மாணவர்களை உருவாக்குதல் சமூகத்தின் முக்கிய கடமை எனவும் தெரிவித்தனர்.

பாடசாலையின் அதிபர் தனது உரையில், ஆரம்பக் கல்வி ஒரு மாணவரின் வாழ்நாள் முழுவதுமுள்ள கல்விக்கான அடிப்படை என்பதால், அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் வழங்கிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்