24.9 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம்- சீரான வானிலை.
மன்னார்- சீரான வானிலை.
மட்டக்களப்பு- சீரான வானிலை.
திருகோணமலை- சீரான வானிலை.
கண்டி- சீரான வானிலை.
நுவரெலியா- சீரான வானிலை.
இரத்தினபுரி- சீரான வானிலை.
அனுராதபுரம்- சீரான வானிலை.
கொழும்பு- சீரான வானிலை.
காலி- சீரான வானிலை.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை சேனாதிராஜா – ஒரு அரசியல் சரித்திரம்

east tamil

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

east tamil

கிரானில் விழிப்புணர்வு வீதி நாடகம்

east tamil

அநுரவின் வருகைக்கு எதிரான போராட்டங்களுக்கு தடைகோரும் பொலிசார்

Pagetamil

யோஷிதவிடமிருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல்

east tamil

Leave a Comment