அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளிற்கு பதிலளிக்க 24 மணித்தியால அவகாசம் கோரிய அமைச்சர்!

Date:

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளிற்கு பதிலளிக்க, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 244 மணித்தியால அவகாசத்தை கோரியுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளிற்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று, இரவு 8 மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று இரண்டாவது நாளாக பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றது.

இதையடுத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன், அமைச்சர் கெஹலிய இன்று பேச்சில் ஈடுபட்டார்.

இதன்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளிற்கு பதிலளிக்க 24 மணித்தியால அவகாசம் கோரியுள்ளார். அமைச்சரின் சாதகமான பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  நிறைவேற்று செயற்குழு நாளை நிலைமையை மதிப்பிடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்