தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் ஒன்று இன்று களுத்துறை மாவட்டத்தின் பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானம் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷாந்த விஜேசிங்க தெரிவித்தார்.
இலகுரக பயிற்சி விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அவர் கூறினார். சம்பவத்தின் போது ஒரு பயிற்றுவிப்பாளர் பைலட் மற்றும் பயிற்சி மாணவர் ஒருவரும் விமானத்தில் இருந்துள்ளனர்.
விமானப்படையின் மீட்புக் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய குரூப் கப்டன் விஜேசிங்க, பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சி மாணவர் காயம் அடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இலகுரக பயிற்சி விமானத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தொழிநுட்ப குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்து விமானத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.