25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

ஊழலுக்கு எதிராக பேசிய ரஞ்சன் உள்ளே; ஊழல்வாதிகள் வெளியே: சஜித்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க வேண்டுமென நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் சார்பாக உண்மையைப் பேசிய ரஞ்சன் சிறையில் இருப்பதாகவும், பல மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஞ்சன’ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென சஜித் மீண்டும் வலியுறுத்தினார்.

மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ரஞ்சன் ராமநாயக்க தயங்கவில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அத்தகைய நபர் சிறையில் இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் பல தடவைகள் பேசியதாகவும், மனிதாபிமான அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவை சகல சிவில் உரிமைகளுடன் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ராமநாயக்கவின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக வீதியில் இறங்குவது உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment