இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகாட் சகோதரிகள் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் 17 வயதான இளம் மல்யுத்த வீராங்கனையான ரித்திகா போகாட் மரணமடைந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அரியானா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரித்திகா போகாட் மல்யுத்த வீரங்கனைகளான கீதா மற்றும் பாபிதா போகட்டின் தாய் வழி சொந்தத்தில், சகோதரி உறவு முறையில் வருகிறார். தற்கொலைக்கான காரணம் போட்டியில் பெற்ற தோல்வியாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என அரியானா மாநிலத்தின் சாக்ரி தாதிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் சிங் பிஷோனி தெரிவித்துள்ளார்.
தங்கல் படத்தில் வரும் மல்யுத்த சகோதரிகளின் கதை நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கபட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வரும் கீதா, பபிதா சகோதரிகளின் உறவினர்தான் உயிரிழந்த ரித்திகா போகட் ஆவார்.
Terrible news that we lost #RitikaPhogat who had a brilliant career ahead. The world has changed from where it was some decades ago. Athletes are facing pressures which were not there earlier. An essential part of their training should be to deal with these pressures.
— Gen VK Singh (@Gen_VKSingh) March 18, 2021



