குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார்.
அவரை கட்டாய விடுப்பில் அனுப்பிய காலத்திற்குரிய அனைத்து ஊதியங்களையும் அவருக்கு வழங்கவும் பொதுச் சேவை ஆணைக்குழு சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
மருத்துவர் ஷாபி, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியி பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என, சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் குற்றம்சுமத்தின.
இந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
2019. மே 24, முதல் மருத்துவர் ஷாபியை கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை சுகாதார அமைச்சு எடுத்து.
பின்னர் குருநாகல் பிரதான நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மொஹமட் ஷாபி ஷிஹாப்தீன், தாய்மார்களின் கருமுட்டைக் குழாய்களை அடைத்ததாகவோ, சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவோ, அல்லது பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவோ இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2019 ஜூலை மாதம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.




